கோக்கு மாக்கு

கரூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற அமர்வு: வருவாய்த்துறை வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று வருவாய் துறை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு என தனித்துவமான மக்கள் நீதிமன்றம் நடத்தியது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் இதர வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டது. கரூரில் ஒரு அமர்வு, குளித்தலையில் ஒரு அமர்வு என மொத்தம் இரண்டு அமர்வுகள் நடைபெற்றது. இந்த அமர்வுகளில் 91 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 1,76,41,531/-தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
முதன்மை மாவட்ட நீதிபதி .R. சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள், பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் /சார்பு நீதிபதி M.பாக்கியம் செய்திருந்தார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button