திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி வயது 63. இவர் முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கருத்தாண்டி பட்டியில் இருந்து விளாம்பட்டிக்கு வருவதற்காக அவ்வழியாக வந்த குருவித்துறை என்ற ஊரைச் சேர்ந்த இளையராஜா வயது 61. என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கருத்தாண்டிபட்டி அடுத்துள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ராஜேஸ்வரி அரசு பஸ் சக்கரத்துக்குள் விழுந்ததால் தலையில் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து இறந்து போனார். இதன் பின்னர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் இளையராஜா கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தலை நசுங்கி முன்னாள் சத்துணவு அமைப்பாளர் இறந்து போன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
பெண் அரசு மருத்துவருக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி..
October 12, 2020
3 பேர் மீது வழக்குப்பதிவு
November 23, 2024
Check Also
Close