செய்திகள்
Trending

அதி பயங்கர நிலச்சரிவு; 2000 பேர் உயிரோடு புதைந்த அதிர்ச்சி- மீட்பு பணிகள் தீவிரம்! “நிலச்சரிவு தொடர்ந்து மெதுவாக நிகழ்ந்துகொண்டிருப்பதால் நிலைமை இன்னும் சீராகவில்லை. அதனால் மீட்புக் குழுக்களுக்கும் ஆபத்தான சூழலே நிலவுகிறது.” – பேரிடர் மீட்புக் குழு

பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தின் முங்காலோ மலையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இது தொடர்பான தகவல்கள் வெளியானதும், ராணுவம், தேசிய மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சுமார் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டிருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து பப்புவா நியூ கினியா பேரிடர் மீட்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த பெரும் நிலச்சரிவு 2,000 க்கும் மேற்பட்ட மக்களை உயிருடன் புதையுண்டு, பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறது. நிலச்சரிவு தொடர்ந்து மெதுவாக நிகழ்ந்துகொண்டிருப்பதால் நிலைமை இன்னும் சீராகவில்லை. அதனால் மீட்புக் குழுக்களுக்கும் ஆபத்தான சூழலே நிலவுகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் 20 முதல் 26 அடி ஆழ இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது.

ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்திருப்பதால், அதில் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இனி நிலச்சரிவில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. கட்டடங்கள், விவசாய தோட்டங்கள் அழிந்தததின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button