தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் இணைந்து நடத்தும் சப் ஜூனியர் ஆண்கள் பெண்கள் போட்டியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்), பெ. சு. தி. சரவணன் (கலசப்பாக்கம்), மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர் மரு. எ. வ. வே. கம்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.