கோக்கு மாக்கு
Trending

கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற கைவினைக் கலைஞர்கள்

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழா சென்னை மாமல்லபுரத்தில் நடந்தது. விழாவில், கைவினைக் கலைஞர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களும் விருதுகள் பெற்றனர்.அதில் தனிநபர்களுக்கு 4 கிராம் தங்கக் காசு, 50 ஆயிரம் ரூபாய் காசோலை, குழு உற்பத்தி விருதாக 4 கிராம் தங்கக் காசு, 40 ஆயிரம் ரூபாய் காசோலை, மாவட்ட கைத்திறன் விருதாக 3 பேருக்கு தலா 5 கிராம் வெள்ளிப் பதக்கம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விருதுகள் பெற்ற கைவினைக் கலைஞர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த்தை சந்தித்து பரிசுத் தொகை, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் சந்திரசேகரன், கைவினைக் கலைஞர் சக்திவேல் உட்பட கைவினைக் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button