திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 57ஆயிரத்து 550-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடைசியாக செப். 13-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணம் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், 10 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ. 1, 23, 336-ம், திருப்பணி உண்டியல் ம லம் ரூ. 27, 579-ம் கோசாலை உண்டியல் மூலம் ரூ.6, 635-ம் என 12 உண்டியல்கள் மூலம் மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 550-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வர் ப. முத்துசாமி, செயல் அலுவலர் ஹரிஹரன், கணக்காளர் லோ. ஜெகதீசன் ஆகியோர் மேற்பார்வையில் செய்யாறு போலீஸார் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.