கோக்கு மாக்கு
Trending

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் ஒவ்வொரு வாரப் புதன்கிழமையும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 34 மனுதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தேவராஜ், குகன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி, காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் மனுதாரர்கள் பலர் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button