திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் நடுநிலைப் பள்ளி பழுதுபார்த்தல், கல்வெட்டு அமைத்தல், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுதல், நெமிலி கிராமத்தில் தனிநபர் கழிப்பறை அமைத்தல், புதுப்பாளையம் கிராமத்தில் கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுதல், புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், தனிநபர் கழிப்பறை அமைத்தல், மாத்தூர் கிராமத்தில் பொது நிதித் திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடத்துக்காக உணவுக்கூடம் அமைத்தல், வெள்ளகுளம் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், அங்கன்வாடி மையம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா. மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் சபாநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனன், ஷீலா அன்புமலர், பொறியாளர்கள் அன்பு, ரவி மலர்வண்ணன், வேளாங்கண்ணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.