திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியினை தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் நேற்று (06.12.2024) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.