திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் மரு. அருண்தம்புராஜ், இஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., ஆகியோர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2024 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. சுதாகர், இகாப., இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மரு. செல்வவிநாயகம் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.