
சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட போவதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு முன்பு தீக்குளிக்க போவதாகவும் சமூக வலைதளத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பதிவிட்டதால் சர்ச்சை

திண்டுக்கல்லில் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பரமன் நிலையில் சாதி ரீதியாகவும் ஊராட்சி வேலைகளிலும் கமிஷன் கொடுப்பதிலும் அதே கட்சியைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை ( சிறுமலை ஊராட்சி முன்னாள் துணை தலைவர் ) என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனைகளில் வெள்ளிமலை உடனடியாக கட்சியை விட்டு விலக்க வேண்டும் இல்லையெனில் நான் அமைச்சர் வீட்டு முன்பாக தீக்குளிப்பேன் எனது சமூக வலைதளங்களில் பதிவிட்டது திண்டுக்கல் திமுகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

மேலும் அவரது இன்னொரு பதிவில் சிறுமலையவே வெள்ளிமலை கபளீகரம் செய்து விட்டதாக அர்த்தம் வரும் வகையிலும் சிறுமலையில் நடந்த அனைத்து சட்ட விதி மீறலும் வெள்ளிமலையால் தான் நடந்து வருகிறது என்கின்ற அர்த்தம் வரும் வகையிலும் பதிவிட்டிருந்தார்

மேலும் தான் சுயேட்சையாக திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தேர்தல் சின்னம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்
இந்நிலையில் இன்று காலை தலைகீழாக பல்டி அடித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப வேண்டாம் நான் கோபத்தில் செய்து விட்டேன் என பதிவு செய்து அனைத்தையும் டெலிட் செய்துள்ளார்

தற்போது திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கோட்டையாக இருந்து வருகிறது இதனை முறியடிக்க பல்வேறு திட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது இந்நிலையில் இது போன்ற உட்கட்சி பூசலால் இந்த முறை திண்டுக்கல் பகுதியில் திமுக ஜெயிப்பது கேள்விக்குறியாக உள்ளது
நேற்று இரவு அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டு முன்பாக தீக்குளிப்பேன்– இன்று அனைத்து பதிவுகளையும் அழித்துவிட்டு மன்னிப்பு

தேர்தலில் சுயேசையாக போட்டியிடுவேன் கட்சி சின்னம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளத்தில் மாறு தட்டிய திமுக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பரமன்
பொழுது விடிந்த பின்பு ஐயா என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க நான் கோபத்தில் செய்து விட்டேன் என்று அந்தர்பல்டி
சமூக வலைதளத்தில் போடப்பட்ட போஸ்ட்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எள்ளி நகையாடும் நெட்டிசன்கள்
தப்பிப்பாரா திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமன்