கோக்கு மாக்கு
Trending

திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன .

இதற்காக ஸ்டேட் பேங்க் அருகே உள்ள பெரியார் சிலை பகுதி ஒரு வழி பாதையாக இன்று காலை முதலே மாற்றப்பட்டது.

மேலும் மெயின் ரோட்டில் உள்ள கடைகளை மதியம் 2 மணி முதல் மூடிவிடுமாறு காவல்துறை சார்பாக வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் வாய்மொழி உத்தரவை மீறி தொடர்ந்து கடையை திறந்து வைத்திருந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக மூடவைத்தனர்.

ஏற்கனவே வியாபரம் இல்லாமல் மன வேதனையில் இருந்த வியாபாரிகள் இது குறித்து தேர்தல் பார்வையாளர்களுக்கும் , தேர்தல் ஆணையத்தின் இலவச எண்ணில் -லும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது .

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தேர்தல் பார்வையாளர்களுக்கும் , தேர்தல் ஆணையத்தின் இலவச எண்ணில் -லும் புகார் தெரிவித்த வியாபாரிகள் யார் யார் என இரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button