சென்னை M5 எண்ணூர் காவல் நிலைய A+ சரித்திர பதிவேடு குற்றவாளியான தனசேகரன் (எ) எண்ணூர் தனசேகர் எனபவர் மீது 9-கொலை வழக்குகள், 11-கொலை முயற்சி வழக்கு, 5-வழிபறி வழக்குகள், ஆட்கடத்தல் வழக்குகள், தனியார் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்த வழக்குகள் கொள்ளையடித்த வழக்குகள் என மொத்தம்-80 வழக்குகள் இருந்து வந்த நிலையில் மேற்படி எதிரிக்கு கனம் IV கூடுதல் அமர்வு நீதிமன்றம் பொன்னேரி அவர்களால் எண்ணூர் காவல் நிலைய குற்ற வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், காவல் இணை ஆணையாளர் சிவகுமார், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி, செங்குன்றம் காவல் துணை ஆணையாளர்
K. மகேஸ்வரி அவர்களின் வழிகாட்டுதலின் படி, எண்ணூர் சரக காவல் உதவி ஆணையாளர் வெங்கட்குமார் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் விஜயகுமார், காவல் ஆய்வாளர் அமீர் அலி ஜின்னா, ஆகியோர்களின் தலைமையிலான தனிப்படை அமைத்து மேற்படி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மேற்படி குற்றவாளிகள் அவனது கூட்டாளிகளும் கொலை வழக்கு குற்றவாளிகளுமான மனோ @ மனவாளன், இளந்தமிழன், சரத்குமார், கதிரேசன் மற்றும் புவனேஷ்வரன் கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் தெரிய வந்த நிலையில் அதிகாலை 05.00 மணிக்கு மேற்படி தனிப்படையானது கிண்டியில் உள்ள ஓட்டலை சுற்றி வலைத்து கைது செய்த போது மேற்படி குற்றவாளிகள் உரிமம் இல்லாத கைதுப்பாக்கி மற்றும் தோட்டாகள்-4, செல்போன்கள்-5, விலை உயர்ந்த சொகுசு கார்-1, பட்டாகத்திகள்-5 மற்றும் பணம் ரூ.265000/- ஆகியவைகள் அவர்களிடம் இருந்து பரிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர்