கோக்கு மாக்கு
Trending

குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள ஏ. பி நகர், பிஸ்மி நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இந்த பகுதியில் உள்ள குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது

இதற்கிடையே இந்தப் பகுதியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட காரணத்தினால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டது

இதனால் இப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தோல் நோய்கள் அதிக அளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நள்ளிரவில் மரும நபர்கள் குளத்தில் ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

இது குறித்து அப்போதையைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது

இந்நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

இதனால் இந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button