
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி குரும்பபட்டி ராஜேஷ் என்பவர் வீட்டின் முன்புறமும் மற்றும் இடையகோட்டை பகுதியில் பெருமாளம்மாள் என்பவர் வீட்டின் முன்புறமும் நேற்று மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசினர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கன்னிவாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்
விசாரணையில் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன், நாகப்பன்பட்டியை சேர்ந்த நிர்மல், சுள்ளெரும்புவை சேர்ந்த மோகன் குடைப்பாறைபட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் 2 சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்