சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்நாடு மின்வாரிய மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் டி.ஆர்.கே மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆறுகால பூஜை, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் மற்றும் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு ஆகியவை விமரிசையாக நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாடுகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் டி.ஆர்.கே பிரவீன், க.ஜோதிமுத்து மற்றும் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


