
மேகதாது அணை கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், தமிழக – கர்நாடகா எல்லையை நிரந்தரமாக மூடுவோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில், மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வாட்டாள் நாகராஜ், மஞ்சுநாத் தேவா தலைமையில் 60-க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர். அப்போது வாட்டாள் நாகராஜ், மேகதாது திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் தமிழக எல்லையை நிரந்தரமாக மூடுவோம் என்றும், கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் எச்சரித்தார். மேலும் வரும் 13-ம் தேதி அகண்ட கர்நாடகா பந்த் நடைபெறும் எனவும் அறிவித்தார். அவர்களை கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டதுடன், இரு மாநில பேருந்து சேவையும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.


