
சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த அரசு பேருந்து கலங்கரை ஓடை அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் உயர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த அரசு பேருந்து கலங்கரை ஓடை அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் உயர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரசு பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
