செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய ஷகிலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை – வீடியோ வைரல்

நடிகை ஷகீலா அதிக நேரம் படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்து கொண்டு மொபைல் போனில் கேம்ஸ் விளையாடியதன் காரணமாக ஷகீலாவுக்கு  கழுத்து  நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களை அணுகியபோது, கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்து ரூ. 3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கேம்ஸ் விளையாடியதும், ரீல்ஸ் பார்த்ததுமே எனக் கூறிய அவர், மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும், குழந்தைகளின் ஸ்கிரீன் டைமை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button