க்ரைம்

திருவள்ளூர் : 10 சவரன் நகை கொள்ளை- இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான குரளரசன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 10 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். இந்நிலையில் வீடு திரும்பிய குறளரசன் வீட்டில் நகைகள் திருடப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சென்னையை அடுத்த மாங்காடைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் ஆகாஷ் என்பதும், அவர்கள் நகைகளை திருடியதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button