
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மெபெட்ரோன் என்னும் ஒரு வகை போதைபொருள் சிக்கியது. இதை தொடர்ந்து, புலன் விசாரணை நடத்தியதில் புனேயில் 867 கிலோவும், டெல்லியில் 970 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ 6 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட வழக்கில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் வீரேந்தர் சிங் பசோயா துபாயில் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இது குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்ட போலீசார் துபாய்க்கு தப்பிச் சென்ற வீரேந்தர் சிங் பசோயா கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
