
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரஸ் தீவுப் பகுதியில், இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.7 ரிக்டர் அளவாக பதிவான நிலையில் முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதே பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் தொடர் அதிர்வுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏராளமான கட்டடங்கள் சேதம் அடைந்தன. இந்த நில நடுக்கம் காரணமாக அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

