
பழனி அருகே நெய்க்காரப்பட்டி வி.கே.மில்ஸ் போலாமாவலசு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 88 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார் ஆனந்த் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பீர் முகமது (42) என்பவரிடம் 14 கிலோவும், போலம்மாவலசைச் சேர்ந்த அகமது அலி (50) என்பவரிடம் 74 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன