செய்திகள்

சங்கரன்கோவில் : இருசக்கர வாகனம் மோதி ஊராட்சி செயலர் பலி

தென்காசி மாவட்டம் நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலர் பாலசுப்ரமணியன் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி முடித்து வீடு திரும்பிய நிலையில் தெற்குப்புதூர் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளானார். அந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து, உறவினர்கள் தெற்குப்புதூர் விலக்கு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அரசு அதிகாரிகள் உடனடியாக வேகத்தடை அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button