க்ரைம்

கும்பகோணம் : மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

கும்பகோணத்தை அடுத்த இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி மகாதேவி. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நேற்று இரவு கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ராமராஜன் கட்டையால் மனைவியை தாக்கியதில், மகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் ராமராஜன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகாதேவியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாதேவின் தலையில் காயம் இருந்ததைக் கண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் ராமராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனைவியை அடித்துக் கொன்றகாக அவர் ஒப்புக்கொண்டதால் ராமராஜனை போலீசார் கைது செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button