செய்திகள்

சிவகங்கை : காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் மயக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் 1,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட பிபிஏ துறை மாணவிகளுக்கு நிரந்தர வகுப்பறை வசதி இல்லாமல், மரத்தடிகள் மற்றும் சைக்கிள் நிறுத்துமிடங்களில் வகுப்புகள் நடத்தப்படுவதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பலமுறை முறையிட்டும் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, வகுப்புகளை புறக்கணித்து 300-க்கும் மேற்பட்ட பிபிஏ துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த காத்திருப்பு போராட்டத்தில் மாணவிகள் வெயிலில் நீண்ட நேரமாக நின்றதால் 7 மாணவிகள் மயங்கி விழுந்தனர். இந்நிலையில் மயங்கி விழுந்த 7 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button