
தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஒண்டிவீரனின் குடும்பத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் முளைப்பாரி மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து, அவரது நினைவுத்தூணிற்குப் பால் அபிஷேகம் செய்து தங்கள் மரியாதையைச் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நினைவுத்தூணிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

