செய்திகள்

தென்காசி : இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்ந்த இசக்கிராஜ் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ரயில்வே பீடர் சாலைக்கு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இசக்கிராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இசக்கிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலறிந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button