
சென்னை அண்ணா நகர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் நெல்லை காபி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீ பரவி கட்டிடம் முழுவதும் கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு பணித்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து, நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.



