
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டவிளை செல்லங்கோணம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களை தலைமை ஆசிரியர் தனது கால்களைத் தடவி விடுமாறு சுய வேலைகளுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். இது மட்டுமில்லாமல், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையையும் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து, பெற்றோர்கள் ஒன்றிணைந்து இச்சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சருக்குப் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.