
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்தை ஆழப்படுத்தும் பணிக்காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் கனரக லாரிகள் மூலம் விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விவசாய நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் வழங்கக் கோரி ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய விவசாயிகள், தற்போது மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோரம்பள்ளம் குளத்தில் மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், விவசாயிகளின் தேவைக்கேற்ப உரிய வண்டல் மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


