க்ரைம்

லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நீக்கம்


பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த்தன் பணியாற்றி வருகிறார். இவர், ஒப்பந்ததாரரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கியதுடன், மேலும் ரூ.2,000 வழங்க வேண்டும் என பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தனிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால், சித்தார்த்தனை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button