
தென்மேற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் இன்று மதியம் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அப்பகுதியில் கல்வி நிறுவனங்கள் அதிகம் என்பதால், அந்த கட்டடம் மாணவர்களுக்கான கட்டண விடுதியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான மாணவர்கள் விடுதிக்குள் இருந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 50 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த12 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
