
டில்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், இன்று மதியம் விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 50 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், 12 தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

