
தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நவீன் மிட்டலின் தனிச்செயலாளராக பணியாற்றி வரும் ராஜு, திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் வாகிடி ஸ்ரீஹரி உடனடியாக அவருக்கு உதவினார். ராஜுவுக்கு அமைச்சர் சிபிஆர் முதலுதவி அளித்ததுடன், மருத்துவக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அங்கு வந்த மருத்துவர்கள் ராஜுவை பரிசோதித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு சென்றனர். மேலும், இச்சம்பவத்தின் போது அமைச்சர் சமயோசிதமாக செயல்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


