செய்திகள்

மூணாறு : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் சேதமடையும் அபாயம்

மூணாறு அருகே மாட்டுபட்டி கொரண்டிக்காடு, சொக்கர்முடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட நீலக்குறிஞ்சி மலர்கள் இந்த ஆண்டு அதிகளவில் பூத்துள்ளன.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுவாக மழையின்றி வெயில் நிலவும் சூழலில் குறிஞ்சி மலர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை செடிகளில் காணப்படும். ஆனால், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலர்கள் அழுகத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மழை பெய்யும் பட்சத்தில், குறிஞ்சி மலர்கள் பெருமளவில் அழுகி சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சொக்கர்முடி மலையில் குறிஞ்சி மலர்களை காண சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளனர். அதேசமயம், மாட்டுபட்டி கொரண்டிக்காடு மலையில் குறிஞ்சி மலர்களை காண விதிமுறைகளை மீறி நுழைவுக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படும் தனியார் தேயிலை நிறுவன நிர்வாகம், சுற்றுலா பயணிகளுக்கான பார்வை காலக்கெடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button