
ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அணி 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் அஜித்குமார், தனது ரேசிங் அணியுடன் சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றது.
இதில் அந்த அணி ஓட்டிய கார் 2-வது இடத்தை பிடித்தது. இதையடுத்து, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் 5-வது இடமும், கன்ஸ்டிரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் 3-வது இடமும் அஜித் அணிக்கு கிடைத்தது.
2-வது இடத்தை பிடித்ததை தேசியக் கொடியை ஏந்தி அஜித்குமார் கொண்டாடினார். தொடர்ந்து அணியினருடன் மேடையில் கோப்பையை பெற்றுக்கொண்டார்.


