செய்திகள்

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் – 5 பேர் பலி

கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, மண் சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் மலப்புரம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மேலும் 2 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், ஒவ்வொரு மணி நேரமும் நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வி.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவின் சில பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button