க்ரைம்

திருநெல்வேலி : கோவில் கொடை தகராறில் வாலிபர் வெட்டி கொலை – ஒருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழதேவநல்லூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த ரமேஷ்ராம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜா என்பவருக்கும் இடையே கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு ரமேஷ்ராம் தனது உறவினர்கள் இருவருடன் மணிமுத்தாறு கால்வாய் கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ரமேஷ்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கொலை வழக்கில் தொடர்புடைய கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஸ்ரீராம் பூபதி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், முத்துராஜா உள்ளிட்ட சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button