செய்திகள்

சாலை வசதி இல்லாததால் நோயாளியை 8 கி.மீ. தூரம் தூளியில் தூக்கி வரும் அவலம்

தர்மபுரி மாவட்டம், அலக்கட்டு மலைக்கிராமத்தில் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இதுவரை சாலை வசதி ஏற்படுத்தப்படாததால், அவசர காலங்களில் நோயாளிகளை தூளி கட்டி பல கிலோமீட்டர் தூரம் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மல்லிகா திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வாகனம் செல்ல சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் அவரை தூளி கட்டி கரடு முரடான மலைப்பாதையில் சுமார் 8 கி.மீ. தூரம் தூக்கிச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மலைப்பாதைகளிலும் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், நோயாளியை அழைத்துச் செல்வதில் மேலும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அலக்கட்டு மலைக்கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு பாம்பு கடித்த பெண் ஒருவரை இதேபோல் தூளியில் வைத்து மலைப்பாதையில் தூக்கிச் சென்றபோது, பாதி வழியிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் நடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், தங்களது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி, அவசர காலங்களில் உயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button