புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் அருகே உள்ளது ரெங்கம்மாள் சத்திரம் என்ற கிராமம் இந்த கிராமத்தில் நரிக்குறவ இன மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர் இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும் போது அந்த வழியாக சென்ற மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது இதனையடுத்து மணி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் வண்டியை சாலையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் இந்நிலையில் இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பால்ராஜ் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து இதனை பார்த்த அப்பகுதியினர் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த பால்ராஜ் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் சாலைகளில் மரங்களை போட்டு புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தொன்றுதொட்டு விபத்துக்கள் தங்கள் பகுதியில் அரங்கேறி வருவதாகவும் விபத்துக்களை தடுக்க அந்த பகுதியில் காவல்துறையினர் பேரிகார்டுகளை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்த பால்ராஜை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து மினி சரக்கு வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.