மகள் பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை!!
மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் தில்ஷாத் ஹுசைன். சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவர் வீட்டு அருகே உள்ளவர் பகவத் நிஷாத்.
கடந்த 2020-ம் ஆண்டு ஆளில்லாத நேரத்தில் பகவத் நிஷாத் மைனர் மகளை கடத்திச் சென்றுள்ளார். 2021 மார்ச் மாதம் ஹைதராபாத்தில் தில்ஷாத்தை போலீசார் கைது செய்து, மைனர் பெண்ணை மீட்டனர்.
சிறுமி அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில் தில்ஷாத் மீது போக்சோ உள்பட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கறிஞரின் அழைப்பின்பேரில் கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு தில்ஷாத் வந்துள்ளார்.
வழக்கறிஞரை சந்திப்பதற்காக அவர் காத்திருந்த நிலையில், திடீரென அங்கு வந்த பகவத் நிஷாத், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தில்ஷாத்தின் தலையில் சுட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே தில்ஷாத் உயிரிழந்தார்.
அருகில் இருந்த போலீசார் பகவத் நிஷாத்தை கைது செய்தனர். தில்ஷாத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.