திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் நீர்நிலைகள் மற்றும் கிராம்புற பகுதிகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு காட்டாம்பூண்டி ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்), பெ. சு. தி. சரவணன் (கலசப்பாக்கம்), மாநில தடகளச் சங்கத் துணைத்தலைவர் மரு. எ. வ. வே. கம்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.