கோக்கு மாக்கு
Trending

ஏரியை பார்வையிட்ட சார் ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகும் தூசி மாமண்டூர் ஏரி. தொடர் மழையின் காரணமாக, இந்த ஏரிக்கு 70 சதவீதம் அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியை செய்யாறு சார் -ஆட்சியர் பல்லவி வர்மா பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதேபோல, வெம்பாக்கம் வட்டம் தூசி பிரிவில் உள்ள 93 ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தூசி மாமண்டூர் ஏரியை நம்பியுள்ள 14 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏரிப் பகுதியில் தூசி போலீஸார் ஒலி பெருக்கி மூலம் ஏரியில் இறங்கக் கூடாது, குளிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button