உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துர்நாற்றம் மற்றும் ரத்தம் போன்ற திரவம் வெளியேறியதை கவனித்த பயணி அளித்த தகவலின் பேரில், ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எப். அதிகாரிகள் சூட்கேஸை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சூட்கேஸில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையின் கவர்கள் மற்றும் பில்கள் இருந்தது. எனவே அது சென்னையில் இருந்து ரயிலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச ஜி.ஆர்.பி. அதிகாரிகள் சிறப்பு குழுவாக சென்னை வந்து, தமிழ்நாடு போலீசாருடன் இணைந்து ரயில் நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே உயிரிழந்தவர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read Next
செய்திகள்
11 hours ago
புலிகள் காப்பகத்தில் புலி சடலம் கண்டெடுப்பு
க்ரைம்
19 hours ago
நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா மான் வேட்டை
11 hours ago
புலிகள் காப்பகத்தில் புலி சடலம் கண்டெடுப்பு
14 hours ago
MP சச்சிதானந்தத்தின் சமூகவலைத்தள பதிவின் எதிரொலி – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றம்
19 hours ago
நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா மான் வேட்டை
1 day ago
வேட்டையாடத் திட்டம் தீட்டி ஆயுதங்களோடு சுற்றிக்கொண்டிருந்த 12 பேர் கொண்ட கும்பல் கைது – வனத்துறையினர் அதிரடி
1 day ago
கிருஷ்ணகிரி : பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ₹3 லட்சம் கொள்ளை
1 day ago
நாட்டுத்துப்பாக்கி வெடித்து விபத்து
1 day ago
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மது போதையில் இளைஞர் அட்டகாசம்
2 days ago
தூத்துக்குடி : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை
2 days ago
தாம்பரம் : போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவர் கைது
2 days ago
ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Related Articles
கரு கலைக்க கொடுக்கபட்ட விஷத்தால் தாயும் உயிரிழப்பு ..
October 19, 2020
ஒரு ஜாக்கெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மனைவி….
December 6, 2021
Check Also
Close
