சேரன்மகாதேவி அருகே உள்ள வடக்கு இடையன்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன்கள் செல்வக்கனி (74), டேனியல் (65). இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை செல்வக்கனி வீட்டிற்கு சென்ற டேனியல் திடீரென அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்கனி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட டேனியலை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர். டேனியலுக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. செல்வகனிக்கு ஒரு மகள் உள்ளதாகவும், அவர் சிவந்திபுரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
Read Next
2 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
2 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
2 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
2 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
3 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
3 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
3 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
3 days ago
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்
3 days ago
காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை – தீர்வு எப்போ? சமூக ஆர்வலர்கள் கேள்வி
3 days ago
பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு – இந்து அமைப்புகள் கண்டனம்
Related Articles
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்
May 30, 2024
மனுநீதி நாள் முகாம்
November 30, 2024
என்ன செய்தும் வலி தீரவில்லை..
June 17, 2025