
முடிவு எட்டப்படாத வனத்துறை அதிகாரிகளின் விசாரணை!
DFO,ACF உட்பட வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இதர வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலையில் அரசு அனுமதி இல்லாமல் வனத்துறை அதிகாரிகள் ஆதரவோடு வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டு ( மன்னவனூர் ) பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பல்வேறு அரியவகை மரங்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வன குற்றதடுப்பு பிரிவு அதிகாரிகள், திண்டுக்கல் தலைமை வனத்துறை அதிகாரி மற்றும் தமிழக வனத்துறையின் தலைமையிடத்து உயர்அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வனத்துறை தனிப்படை மற்றும் சிறப்பு குழுவினரின் பல்வேறு கட்ட விசாரணை நடத்தியது மட்டுமல்லாது தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையில் மன்னவனூர் வனச்சரகர் உட்பட நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உள்ளேயே அருகில் உள்ள இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் வனக்கோட்டத்தில் பணிபுரியும் பலரும் தங்களது சொந்த செல்வாக்கால் பணியிட மாறுதல் பெற்றவர்கள் எனவும் அதனால் தான் அதே வனக்கோட்டத்தில் அருகில் உள்ள இடங்களுக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதே செல்வாக்கால் தான் தண்டனையில் இருத்தும் தப்பித்துள்ளனர் என்று ஒரு தகவல் வனத்துறையினர் மத்தியில் உலா வருகின்றது.
இதுவரை வனத்துறையில் உள்ள DFO,ACF உட்பட மற்ற வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொது மக்களிடமும் சமூக அலுவலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது இதுவரை வெட்டி கடத்தப்பட்ட மரங்களை வெட்டிய நபர்கள் யாரும் கைது செய்யப்படவே இல்லை என்பதும், மரங்களை வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களோ மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களோ பறிமுதல் செய்யப்படாதது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
வனத்தைக் காக்க வேண்டிய வனத்துறையினரே காப்புக்காடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள பல ஆயிரம் அரியவகை மரங்களை வெட்டி கடத்தியுள்ள சம்பவத்தில் பாரபட்சம் காட்டாமல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த கொடைக்கானல் வனத்துறையில் உள்ள தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் , வன ஆர்வலர்களும் கோரிக்கை
