கோக்கு மாக்கு
Trending

சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடர்ந்து சார் பதிவாளர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யக்கூடிய நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பத்திர எழுத்தர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் மாவட்ட பதிவாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அது சமயம் இன்று வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button