
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி , திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் பள்ளியான புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்களது தபால் ஓட்டுக்களை பதிவுசெய்யவும் நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திமுகவினர் தபால் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிக்குள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக தகவல் பரவியது. தகவல் பரவியதை அடுத்து அங்கு குவிந்த அதிமுக மற்றும் கூட்டணி காட்சிகளை சேர்ந்தவர்கள் குவியதொடங்கினர். இதனால் அங்கு திமுக அதிமுக கட்சியினர் இடையே பதற்றம் அதிகரித்து வாக்குவாதமாக மாறத்தொடங்கியது. வாக்குவாதத்திற்கு இடையே பள்ளி வளாகத்தின் கேட்டினை திறந்து உள்ளே இரு கட்சியை சேர்ந்தவர்களும் நுழைந்தனர்.
பிரச்சனை பெரிதாவதனை உணர்ந்த அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த காவல் துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து உடனடியாக்கள் கூடுதல் காவல்படையினர் குவிக்கப்பட்டு தபால் வாக்குப்பதிவு நடைபெற்ற புனித மரியன்னை மேல்நிலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த அனைவரையும் காவல்துறையினர் வெளியேற்றினர்.