
டெல்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு விழாவை நடத்துவதில் சிரமம் ஏற்படக்கூடும் என்பதால், நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என முதலமைச்சரிடம் தெரிவித்ததாக கூறினார். தொடர்ந்து, வைகோ நாடாளுமன்ற உரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் சென்னையில் நடைபெறும் தமிழ் மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு நூலை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.